• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிலம்பாத்தம்மன் ஆலயத்தின் முகப்பு மண்டபம் இடிக்கும் பணிகள் தீவிரம்.

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிலம்பாத்தம்மன் ஆலயத்தின் முகப்பு மண்டபம் இடிக்கும் பணிகள் தீவிரம்.

L.குமார்

UPDATED: Nov 19, 2024, 12:02:41 PM

திருவள்ளூர் மாவட்டம்

சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிலம்பாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கிராம தேவதையான சிலம்பாத்தம்மன் ஆலயம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைக்காக கோவிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. பல ஆண்டுகளாக கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க பொதுமக்களிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் மண்டபத்தை முடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலம்பாத்தம்மன் ஆலயத்தின் முகப்பு

முதற்கட்டமாக கோவிலின் சுற்றுச்சூழல் இடித்து அகற்றப்பட்ட நிலையில், கோவிலின் முகப்பு மண்டபத்தை தனியாக கட்டர் இயந்திரங்களைக் கொண்டு அறுத்து பின்னர் இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள வேப்பமரம் மற்றும் அரச மரத்தை வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆன்மிகம் 

இதனிடையே கோவிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பதால் சாலையில் நின்று கொண்டு சாமி கும்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கோவிலை புதியதாக கட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தராமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவிலுக்கு அருகில் மாற்று இடம் பெற்றுத் தந்து புதியதாக கோவிலை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

பேட்டி - லோகநாதன்

 

VIDEOS

Recommended