பாபநாசத்தில் பட்டியலின மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Nov 20, 2024, 1:07:14 PM

தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் ராஜகிரி ஊராட்சி, காமராஜர் தெரு, நாணல் காடு தெரு, இளங்காரக்குடி கார்த்திகைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் பட்டியலின மக்கள் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் ,  சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி விடுதலை தமிழ் புலிகள் கட்சி கட்சி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  தை. சேகர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச வீட்டு மனை பட்டா

கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள்  கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத் தனி வட்டாட்சியர் முருககுமார் தலைமையிலும் , துணை வட்டாட்சியர் தமயந்தி, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

விடுதலை தமிழ் புலிகள் கட்சி

இக்கூட்டத்தில் ராஜகிரி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தினை நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்து தகுதியான நபர்களுக்குள் இரண்டு மாத காலத்திற்குள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

 

VIDEOS

Recommended