• முகப்பு
  • அரசியல்
  • தமிழகத்தில் இன உணர்வு இருக்கிறதா - திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கேள்வி.

தமிழகத்தில் இன உணர்வு இருக்கிறதா - திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கேள்வி.

JK

UPDATED: Nov 19, 2024, 8:01:57 AM

திருச்சி

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவின் திருச்சி பாராளுமன்ற அலுவலகம் திறப்பு விழா தென்னூர் உழவர் சந்தையில் துரை.வைகோ தலைமையில் நடைபெற்றது.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் மதிவாணன், மற்றும் மதிமுகவின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

துரை.வைகோ

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை.வைகோ.

திருச்சியில் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் புதுக்கோட்டையில் பொதுமக்களின் மனுக்கள் வாங்குவதற்கான அலுவலகம் திறக்கப்படும்.

புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்தவுடன் அலுவலகம் திறக்கப்படும்.

அமைச்சர் சோஷா 

நேற்று மத்திய இணை அமைச்சர் சோஷா  தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கும் இடமாக தமிழக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு?

இதே அம்மையார் தான் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தான் காரணம் அங்கு தான் தீவிரவாதிகளை உருவாகிறார்கள், பயிற்சி கொடுக்கிறார்கள் என தமிழ்நாட்டு மக்களை அவமானம் படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தற்கு  பின்னர் என்ன நிர்பந்தம் காரணமோ மன்னிப்பு கேட்டார்.

மறுபடியும் இது போல் பேசி உள்ளார. இதுபோல பிரிவினைவாத சக்தியெல்லாம் தூண்டும் இந்த இயக்கங்கள் தான் இது போன்றவற்றை வரவேற்கும்.

தமிழ்நாடு

என்ன தைரியம் என்றால் தமிழ்நாட்டில் மத்திய பகுதியான திருச்சியில் அந்தக் கட்சியில பேனர் வைக்கின்றனர். இது மிகவும் சங்கடமானது. 

தமிழ்நாடு பொறுத்த வரை இது திராவிட மண், மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது.

எந்த கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் மதவாத சக்திகளுக்கு மக்கள் இடம் அளிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended