- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது - திருச்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.குரு பேச்சு
தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது - திருச்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.குரு பேச்சு
JK
UPDATED: Nov 19, 2024, 7:49:07 PM
திருச்சி
கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துறையூரில் நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேருவின் புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியிலும் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிப்பது
தி.மு.க கழகத்தலைவரும், தமிழக முதல்வர் அறிவிற்பிற்கிணங்க வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு அயராது பாடுபடுவது என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என் நேரு :
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் மீண்டும் தளபதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
எனவே, அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்றைய நிலையில் மு.க.ஸ்டாலின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறைகளை சொல்லி அடுத்து நாங்கள் தான் என்று பலர் பேசி வரும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த அறிவாலயத்தில் இருந்து நாங்கள் சொல்லுகிறோம் மீண்டும் தலைவர் தளபதி தான் முதல்வராக ஆட்சி பொறுப்பில் ஏறுவார். இன்று அநேகர் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட சிலர் அடுத்த முதல்வர் தளபதி தான் என்று கூறுகிறார்கள்.
2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக நம்முடைய துணை முதலமைச்சர்க்கு வருகை தந்து இளைஞர் அணி கூட்டத்தில் பங்கேற்று, புதிய நூலகத்தை திறந்து வைத்து, கலைஞரின் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.
எனவே தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நிச்சயம் நம்முடைய தளபதி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கூறினார்.