பள்ளியில் ஆசிரியை கொலை: தஞ்சையில் பரபரப்பான சம்பவம்

Bala

UPDATED: Nov 20, 2024, 9:43:35 AM

தஞ்சாவூர்

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியர் ஓய்வறையில் தனியாக அமர்ந்திருந்த ரமணி மீது கத்திக்குத்து நடந்து பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த நிலையில், மதன் குமார் என்பவர் ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைந்து ரமணியுடன் சில நிமிடங்கள் பேசினார். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென கத்தியால் ரமணியை சரமாரியாக குத்தினார்.

ஆசிரியர் கொலை 

ரமணி கடந்த ஆறு மாதங்களாக பள்ளியில் பணியாற்றி வந்தார். அதே நேரத்தில், மதன்குமார் ஒருவருக்கு உணவு கொண்டு வந்தவர் என்று எண்ணி அஜாக்கிரதையாக இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொலையாளி மதன் குமாரை கைது செய்த போலீசார், இந்த கொலை காதல் பிரச்சினை மற்றும் திருமணத்துக்கு எதிர்ப்பு காரணமாக நடைபெற்றது என்று விசாரணையில் கண்டறிந்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு:

சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தகவலறிந்து, "இந்த நிலையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். பள்ளிக்கு அமைச்சர்கள் கோவி செழியன் மற்றும் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தனது சொந்த பிரச்சினை காரணமாக ரமணியை கொன்ற மதன்குமாரின் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

"ஆசிரியர் ரமணியின் கொலைக்கு காரணமானவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" - அதிகாரிகள்.

VIDEOS

Recommended