காஞ்சிபுரத்தில் ஏ ப்ளஸ் நிலை ரவுடி  கஞ்சா கடத்தல்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 19, 2024, 9:16:43 AM

காஞ்சிபுரம் மாவட்டம் 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கள்ளச்சாராய தாதா ஸ்ரீதர் தனபால் அவர்களின் மைத்துனரான பிரபல ரவுடி தணிகா என்பவர் ஒரு அணியாகவும் ஸ்ரீதர் தனபால் இடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த தினேஷ் என்ற பிரபல ரவுடி ஒரு அணியாகவும் செயல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை பெரும் பதட்டத்தில் வைத்திருந்தனர். 

தணிகாவின் வலது கரமாக செயல்பட்டு வந்த காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியை சேர்ந்த வசா என்ற வசந்த் (வயது 28) என்ற ஏ ப்ளஸ் நிலை சரித்திர பதிவேடு குற்றவாளி, தன் சக சரித்திர பதிவேடு குற்றவாளி நண்பர்களான காமராஜ் நகரை சேர்ந்த சிகாமணி, மற்றும் அருண்பாண்டியன் என்ற அலர்ட் அருண் ஆகிய மூவரும் சேர்ந்து

சென்னையில் இருந்து 1.5 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை காஞ்சிபுரத்துக்கு கடத்தி எடுத்துக் கொண்டு வந்த போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான ஸ்பெஷல் டீம் எனப்படும் தனிப்படை காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.5 kg எடை உள்ள கஞ்சாவை கைப்பற்றி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். 

கஞ்சா

காஞ்சிபுரம் மாவட்டத்தையே பதட்டத்தில் வைத்திருந்த பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடி வசா என்ற வசந்த் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும் அடிதடி மிரட்டல் கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி போன்ற 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

அதேபோல அலர்ட் அருண் மீது நாங்க கொலை வழக்குகளும் பதினைந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளை திருட்டு அடிதடி மிரட்டல் போன்ற வழக்குகள் உள்ளது. 

அதேபோல சிகாமணி மீது மூன்று கொலை வழக்குகளும் 13 க்கும் மேற்பட்ட கொள்ளை திருட்டு மிரட்டல் அடிதடி வலிப்பது கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளும் உள்ளது. 

Latest Crime News Today In Tamil

காவல்துறையினரால் அவ்வப்போது பிடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவர். தங்களுடைய இன்ஃபுளின்ஸ் மற்றும் பணத்தை செலவு செய்து குண்டர் சட்டம் முதல் கொண்டு அனைத்தையும் உடைத்து விட்டு சில நாட்களிலேயே வந்து விடுவார்கள்.

இவர்களுக்கு ஏற்றார் போல் சட்டம் உள்ளதோ என தோன்றுகின்றது என சமூக ஆர்வலர்கள் புலம்பினர்.

 

VIDEOS

Recommended