தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்.

முகேஷ்

UPDATED: Nov 21, 2024, 9:21:40 AM

தஞ்சை

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்குமாறு ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் டிசம்பர் 12-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளில் பணியமர்த்த பணம் பெற்றுக் கொண்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்பு துறை

2019-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த 40 பேரின் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆளுநர் இருமுறை விளக்கம் கேட்டும், திருவள்ளுவன் உரிய பதில் தராததால், பணியிடை நீக்கத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

VIDEOS

Recommended