வங்கக் கடலில் நாளை மறுதினம் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு.
கார்மேகம்
UPDATED: Nov 21, 2024, 2:09:35 PM
சென்னை
வங்கக் கடலில் நாளை மறுதினம் சனிக்கிழமை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
வடகிழக்கு பருவமழையின் 2- வது சுற்று மழைப் பொழிவு சில இடங்களில் ஒய்ந்தாலும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று பெய்ததைப் பார்க்க முடிந்தது ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது
வடகிழக்கு பருவமழை
கடல் சார்ந்த அலைவுகளால் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கான டிரெய்லர் மழைதான் இது என்றும் இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்றும் ( வெள்ளிக்கிழமை) நாளையும் மழைக்கான வாய்ப்பு குறைந்து காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
புயல்
மேலும் 23 - ந்தேதி சனிக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாகவும் புயலாகவும் வழுப்பெறக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்