• முகப்பு
  • குற்றம்
  • ஒரகடம் அருகே எழிச்சூர் பகுதியில், 6674 போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அண்ணன் தம்பி

ஒரகடம் அருகே எழிச்சூர் பகுதியில், 6674 போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த அண்ணன் தம்பி

லட்சுமி காந்த்

UPDATED: Nov 21, 2024, 7:47:14 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஒரகடம் அடுத்த எழுச்சூர் கிராமத்தில் தென்றல் ஸ்டோர் என்ற கடையை எழுச்சூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய், பரத் ஆகிய அண்ணன் தம்பிகள் என இரண்டு பேர் நடத்தி வருகின்றார். 

சகோதரர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து போதை புகையிலை, மற்றும் பாக்குகளை மொத்தமாக வாங்கி வந்து எழுச்சூர் என்ற பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வீட்டில் வைத்து ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று விற்பனை செய்து வருகின்றார்கள்.

மேலும் கண்டிகை பகுதியில் தென்றல் ஸ்டோர் என்ற கடையிலும் போதை வஸ்துகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். 

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகளை விற்பனை செய்து வருவதை காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் ஆகியோர் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் இருந்து வந்தனர். 

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் பேரில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கண்டிகையில் உள்ள கடையிலும், எழிச்சூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனையிட்டனர். 

சோதனை இட்டதில் வீட்டின் உள்ளே மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை கண்டறிந்து கைப்பற்றினர்.

அதில் ஹான்ஸ் 525, கூல் லிப் 144, சுவாகத் பாக்கு 440, விமல் பாக்கு 4260, வி ஒன் 1305 என மொத்தம் 6674 பவுச் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போதை வஸ்துகள் கடை மற்றும் வீட்டில் வைத்து விற்பனை செய்த வழக்கில் விஜய் , பரத் ஆகிய சகோதரர்களும், போதை வஸ்துகள் வைக்க இடம் கொடுத்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

VIDEOS

Recommended