கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் வழக்கு சிபிஐ க்கு மாற்றம்.

கோபிநாத் பிரசாந்த்

UPDATED: Nov 21, 2024, 7:33:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கருனாபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் விஷசாரயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இதில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றுக்கோரி பாஜக,பாமக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் விஷசாராய வழக்கை சிபிஐ க்கு மாற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழ அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் வழக்கு சிபிஐ க்கு மாற்றம்.

காவல் நிலையத்தில் இருந்து கல்லெறியும் தூரத்தில் நடந்த கள்ளச்சாராயம் விற்பனை.. முளையிலேயே கிள்ளி இருந்தால், 67 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் யாரும் விசாரணைக்கு மேற்கொள்ள கூடாது என்று அமர்வு நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

VIDEOS

Recommended