• முகப்பு
  • உலகம்
  • ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக நிரந்தரப் பிரதிநிதி நியமிப்பு

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தூதராக நிரந்தரப் பிரதிநிதி நியமிப்பு

கோபிநாத்

UPDATED: Aug 16, 2024, 1:05:19 PM

ஐக்கிய நாடுகள் சபை

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நிரந்தரப் பிரதிநிதியாக பர்வதனேனி ஹரிஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை, வெளியுறவு அமைச்சகம் (MEA) கடந்த 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான ஹரிஷ், ஜெர்மனிக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.

MEA அறிக்கையின் படி, அவர் விரைவில் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். 

ஆகஸ்ட் 24, 2021 அன்று ஜெர்மனிக்கான இந்தியத் தூதராக ஹரிஷ் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி | ஐக்கிய நாடுகள் சபை | இந்தியா

VIDEOS

Recommended