• முகப்பு
  • உலகம்
  • ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்

ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 22, 2024, 5:55:24 AM

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைக் கிடங்கு மற்றும் கட்டளை மையத்தை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.original/download-(32)
செங்கடல் மீது ஏவப்பட்ட பல ஹூதி ஆளில்லா விமானங்களையும் அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

செங்கடலில் பயணம் செய்த தனது கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதேவேளை, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பூங்கா ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (21) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

 

VIDEOS

Recommended