போரூரில் மெட்ரோ ரயில் பணியில் மின்சார கேபிள் திடீரென பட்டாசு போல் வெடித்து சிதறியதால் பரபரப்பு
ஆனந்த்
UPDATED: Aug 21, 2024, 7:31:27 PM
சென்னை
வளசரவாக்கம் ஆற்காடு சாலை லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ பணியின் போது வெல்டிங் செய்யக்கூடிய மின்சார கேபிளில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு போல் வெடித்து சிதறியது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் காலால் அனைத்தும் கற்கள் மற்றும் மணலை கொட்டி தீயை அணைத்த ஊழியர்களின் செயலால் அதிர்ச்சி
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி ஊழியர்கள் பணியில் அமர்த்த படுவதாக புகார்.
மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
மெட்ரோ
இதேபோன்று நேற்று மாலை மெட்ரோ பணியின் போது அலட்சியத்தால் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்று வேலை பார்த்த வடமாநில தொழிலாளி ஒருவர் நசரத்பேட்டையில் மெட்ரோ பணியின் போது 40 அடி பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் பாதுகாப்பு அற்ற முறையில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது இதற்கு ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரின் கோரிக்கையாக உள்ளது
மேலும் தமிழக மெட்ரோ நிர்வாக இயக்குனர் இந்தப் பகுதிகளில் தொழிலாளிகளின் பாதுகாப்பு தன்மையைய் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.