- முகப்பு
- வேலைவாய்ப்பு
- ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியங்கள்.
ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பியங்கள்.
Bala
UPDATED: Jul 28, 2024, 4:15:46 PM
அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
நாடு முழுவதும் ரயில்வே துறையில் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரயில்வே துறையில் சூப்பர்வைசர்கள், இன்ஜினியர்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணிடங்களுக்காக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
மொத்த பணியிடங்கள் : 7,951
- காலிப்பணியிடங்கள் : ஜூனியர் இன்ஜினியர், சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 7,934 பணியிடங்கள்.
- மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர்கள்: 13 காலியிடங்கள்.
ரயில்வேயில் வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி :
- ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு : டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஐ.டி. மற்றும் கணிப்பொறி பிரிவுக்கு : பி.ஜி.டி.சி.ஏ., பி.எஸ்.சி., (கம்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ., அல்லது பி.டெக். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சூப்பர்வைசர் பதவிக்கு : டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- 18 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
- பொதுப்பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ | பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
Railway வேலைவாய்ப்பு செய்திகள்
ஊதியம் :
- ஆரம்பகட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 35,400 முதல் ரூ. 44,900 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான காலக்கெடு :
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 30/07/2024 முதல் 29/08/2024 வரை சமர்ப்பிக்கலாம்.
- கூடுதல் விவரங்களுக்கு: [ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளம்](http://www.rrbchennai.gov.in/).
குறிப்பு : மேலும் விவரங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கான தளத்தை காணவும்.