கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

சண்முகம்

UPDATED: Sep 13, 2024, 1:59:40 PM

தஞ்சை மாவட்டம்

அணைக்கரையில் கீழணை உள்ளது இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தெற்கு, வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளது.

இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் தேக்கப்பட்டு ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. 


Breaking News In Tamil

இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடியா அதாவது 150.13, மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.

இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடவாறு, 300 கன அடி வீதம் வீராணம் ஏரி ,வடக்கு. தெற்கு ராஜன் வாய்க்கால்கள் வினாடிக்கு 300 கன அடி வீதத்தில் குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால், என பல்வேறு வாய்க்கால்களில் வாயிலாக பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது.

கல்லணை 

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 854 ஏக்கரும் தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 1294 ஏக்கரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கர் விளைநிலங்கள் என ஒரு லட்சத்து 31ஆயிரத்து ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

ஆண்டுதோறும் இந்த பகுதியில் சம்பா சாகுபடியின் போது விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவர் சில குறிப்பிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

கீழணை

இன்று கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இஆப, வெள்ளாறு வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர் மரியசூசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ,கொளஞ்சி நாதன்,உதவி பொறியாளர் கேசவராஜ் ஆகியோர் செய்தனர் . 


வீராணம் ஏரி

வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் 43.95 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது .

அதாவது 662 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு ராதா மதகில் இருந்து வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது 

இதன் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது.

 

VIDEOS

Recommended