- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சோழத்தரம் அருகே கிராமத்திற்கான வழியை மறைத்த நெடுஞ்சாலைத் பணியாளர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
சோழத்தரம் அருகே கிராமத்திற்கான வழியை மறைத்த நெடுஞ்சாலைத் பணியாளர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
சண்முகம்
UPDATED: Nov 29, 2024, 2:04:43 PM
கடலூர் மாவட்டம்
சோழத்தரம் அருகே ஆண்டிபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலையில் கிராமத்தின் முகப்பு வழி அமைந்துள்ளது.
இந்நிலையில் பல மாதங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த கிராமத்திற்கு செல்லும் வழியை மறைத்து நெடுஞ்சாலைத்துறை இரும்பு வேலி அமைக்க முற்பட்டனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் இதனை தடுத்து அவர்களை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமத்திற்கான வழியை மறைத்து இரும்பு வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை
மேலும் நெடுஞ்சாலைத்துறை கனரக வாகனங்களால் மண் ஏற்றி செல்லப்பட்டு சேதமாக்கப்பட்ட தங்கள் கிராமசாலையை முழுமையாக சீர் செய்து புதிய சாலை அமைக்க வேண்டும்.
தங்கள் கிராமத்திலிருந்து சர்க்கரை ஆலைக்கு அதிக அளவில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர் உள்ளிட்ட பல வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக தங்களது கிராம சாலை வழியை அமைக்க வேண்டும்.
இல்லை எனில் இப்பகுதியில் இரும்பு வேலியை நீங்கள் அமைக்கவே வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Breaking News Today In Tamil
அதுபோல் எங்கள் கிராமத்தை பாழ்படுத்தியதற்கு என்ன நஷ்ட ஈடு தந்தீர்கள் என கேள்வி எழுப்பியபோது அதற்கு நெடுஞ்சாலை துறையினர் எந்தவித பதிலும் பேசாமல் மௌனம் காத்தனர். மேலும் கிராம மக்கள் சாலை மறியல் செய்யவும் முற்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது நீங்கள் எப்போது இங்கு வந்தாலும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டும் பணிகளைத் தொடருங்கள் இல்லையென்றால் பணியை தொடர வேண்டாம் என அவர்களை திருப்பி அனுப்பினர்.
Latest News Today In Tamil
முக்கியமாக எங்களது கிராம சாலைக்கு சரியான வழிக்கு விடிவுகாலம் பிறக்காத வரையும் மேலும் எங்களது கிராமத்தின் அடையாளமாக பெயர்பலகை வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் இதை ஏற்றுக் கொள்வோம் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.