• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி ரயில்வே குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 5பேர் கைது சிறுவன் தப்பி ஓட்டம்

திருச்சி ரயில்வே குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 5பேர் கைது சிறுவன் தப்பி ஓட்டம்

JK

UPDATED: Aug 23, 2024, 10:55:24 AM

திருச்சி

பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் உத்தரவின்பேரில், துணை ஆய்வாளர் வினோத் தலைமையில் பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்திலிருந்து பொன்மலை ஆர்மரிகேட் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொன்மலைப் பகுதியில் உள்ள பாழடைந்த ரெயில்வே குடியிருப்புக் கட்டிடம் பகுதியில் காவல்துறையினர் சென்றபோது கட்டிடத்தின் பகுதியில் இருந்து 6பேர் அங்கிருந்து ஓடினர்.

இதனை கண்ட காவல்துறையினர் விரட்டிச் சென்று 5பேரை கைது செய்தனர். அதில் 17 வயது சிறுவன் மட்டும் தப்பி ஓடினான். 

Latest Crime News

அவர்கள இருந்த இடத்தை சென்று பார்த்தபோது பயங்கர ஆயுதங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது வழிப்பறி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கம்பு என பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Latest Trichy District News

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் வயது (21), பொன்மலை அடுத்துள்ள கீழக்கல்கண்டார்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்த சரண்குமார் (23), திருச்சி மாவட்டம் சோம்பரசன் பேட்டை அடுத்துள்ள அதவத்தூரைச் சேர்ந்த அரவிந்த், பொன்மலை அடுத்துள்ள மேலக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த விஜய் (20), ராம்பிரசாத் (21) ஆகிய 5பேர் மீதும் பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

News

பின்னர் 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைத்தனர்.

சரியான நேரத்தில் காவல் துறையினர் கண்டறிந்ததால் அப்பகுதியில் நடைபெற இருந்த ஒரு வழிப்பறி சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Breaking News

இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்தாக தெரிவிக்கின்றனர்.

பொன்மலையில் உள்ள ரயில்வே பாழடைந்த குடியிருப்பு பகுதிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended