பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை.

கார்மேகம்

UPDATED: Aug 4, 2024, 6:12:04 AM

இராமநாதபுரம் மாவட்ட

தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரிக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது

மதுரையில் இருந்து பரமக்குடி வரை தற்போது நான்கு வழிச்சாலை உள்ளது 2- ம்- கட்டமாக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்குவழி சாலை அமைக்க 2018- ம்- ஆண்டு அரசு முடிவு எடுத்த போதும் அதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது வேதனைக்குரியது

சாலையோர நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தனி அதிகாரிகள் அலுவலர்கள் நியமித்து பல ஆண்டுகள் ஆகியும் இதற்கான போதிய நிதியை மத்திய அரசு அவ்வப்போது வழங்காமல் காலதாமதம் செய்வதாக கூறப்படுகிறது

பரமக்குடி - ராமநாதபுரம் சாலை

மதுரையில் இருந்து நான்கு வழியாக தொடங்கும் ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலை பரமக்குடியில் இருவழி  பாதையாக சுருங்குவதால் பயண நேரம் அதிகமாவதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மோசமான விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது

எனவே பரமக்குடி - ராமநாதபுரம் சாலையை நான்குவழிப் பாதையாக மாற்றவும்  அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றவும் அரசு போதிய  நிதியை விரைவாக வழங்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 

VIDEOS

Recommended