பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியில் சூழ்ந்த மழை நீர், மீட்பு நடவடிக்கை இல்லை என புகார்.

கார்மேகம்

UPDATED: Nov 23, 2024, 10:13:35 AM

இராமநாதபுரம் மாவட்டம்

பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள மாதா கோவில் கிழக்கு தெருவில் வசிக்கும் குவிட்டோ வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் குவிட்டோ குடும்பத்தினர் செய்வதறியாது இரண்டு நாட்களாக தவித்து வருகின்றனர்

அரசு அதிகாரிகள் மீட்பு நடவடிக்கை எடுக்க வில்லை அதனால் அவர் குடும்பத்துடன் தற்சமயம் அருகே உள்ள கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளார்

இது போல பல வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் தங்க  இடம், தூக்கம், உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்

தற்போது அப்பகுதி மக்கள் நிலை பரிதாபத்துகுள்ளாகி உள்ளன அதனால் பாம்பன் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடன் மீட்பு நடவடிக்கை எடுத்து சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வேண்டும் அத்துடன் அரசு நிவாரண உதவிகள் செய்ய வேண்டும் 

திராவிட மாடல் அரசுக்கு அரசு அதிகாரிகளே கெட்ட பெயர் ஏற்படும் விதமாக மீட்பு நடவடிக்கையில் கவணம் இன்றி இருக்கின்றனர் குறிப்பாக மழை பெய்து பாதிப்பு ஏற்படும் போது செய்யாத உதவியை இந்த அரசு அதிகாரிகள் எப்போது செய்வார்கள் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

இது போன்ற பாதிப்பு ஏற்படும் போது தான்  அரசு நிர்வாகம் உடன் செயல்படவில்லை என்றால் இந்த அதிகாரிகள் அரசுக்கு எதிரானவர்களா ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்

மாவட்டம் தோறும் ஆய்வு செய்யும் முதல்வர் எங்கள் மாவட்டத்தையும் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்

எனவே இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மீட்பு நடவடிக்கை மற்றும் அரசு உதவிகள் செய்ய வேண்டும் என்று அப்பகு மக்கள் கோரிக்கையாக உள்ளது. 

 

VIDEOS

RELATED NEWS

Recommended