- முகப்பு
- மாவட்டச் செய்தி
- போதிய பேருந்துகள் இல்லாமல் படிக்கட்டில் உயிருக்கு ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் பள்ளி மாணவர்கள்.
போதிய பேருந்துகள் இல்லாமல் படிக்கட்டில் உயிருக்கு ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் பள்ளி மாணவர்கள்.
சண்முகம்
UPDATED: Nov 12, 2024, 9:21:25 AM
கடலூர் மாவட்டம்
புவனகிரி பகுதியில் அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாமல் இருந்து வரும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் பேருந்துகள் இல்லாத நிலையில் பள்ளி மாணவர்கள் வேதனையோடு ஆபத்தான முறையில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கி செல்லும் கொடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்து படிக்கட்டில் கால்கள் தரையில் உரசிக்கொண்டு பயணம் செய்வது உயிராபத்தை ஏற்படுத்தும் படியாக இருக்கிறது .
படிக்கட்டில் பயணம்
இதனை தடுக்க வேண்டும் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு மாணவர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து துறை
சேத்தியாத்தோப்பில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண் 17A என்ற பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலையை பார்க்கும் போது பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தே போகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனவும் அரசு பேருந்துகளை தடையில்லாமல் கூடுதலாக இயக்கி மாணவர்களின் நலனை காக்க வேண்டும் என மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.