- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ராமநாதபுரம்- கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்.
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ராமநாதபுரம்- கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்.
கார்மேகம்
UPDATED: Aug 19, 2024, 8:23:11 AM
ராமநாதபுரம்
கீழக்கரை மேம்பாலம் பணி முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை அந்த பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
( கீழக்கரை ரெயில்வே மேம்பாலம்)
ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தடுக்க நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.30.74 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது மொத்தம் 719.60 மீட்டர் நீளத்திலும் 12 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் 5.50 மீட்டர் அகலம் அமைக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே மேம்பாலம்
கடந்த 2018- ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் நீண்ட தாமதத்திற்கு பின்னர் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது
இந்த பாலத்தின் முக்கிய பகுதியான ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது
பாலத்திற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து தெருவிளக்கு வசதி மின்சார வசதி தண்ணீர் வெளியேறும் வசதி பெயிணட் அடிக்கும் பணி என அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன
Latest Ramanathapuram News
( தேர்தல் நடத்தை விதி)
திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டடு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது இதனால் திறப்பு விழா தள்ளிப்போனது
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளது 6 ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து விடிவு ஏற்படும் வகையில் விரைவில் பாலத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாஜக
(போராட்டம் நடத்தப்படும்)
இது குறித்து மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் கூறுகையில் ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்ட ரெயில்வே
மேம்பாலம் அதிகாரிகளின் அலட்சியத்தால் திறக்கப்படாமல் உள்ளது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து மிக நீண்ட காலமாக பணிகள் நடைபெற்று வந்த அத்திகடவு அவினாசி குடிநீர் திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது
அதேபோல இந்த பாலம் தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும் அதற்கு முன்பாக அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பாலத்தை திறக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.