• முகப்பு
  • குற்றம்
  • நாகை அருகே கீழ்வேளூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு செல்லக்கூடிய பெதுபாதையை ஆக்கிரமித்து கார் செட் அமைத்த தனிநபர்.

நாகை அருகே கீழ்வேளூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு செல்லக்கூடிய பெதுபாதையை ஆக்கிரமித்து கார் செட் அமைத்த தனிநபர்.

செ.சீனிவாசன்

UPDATED: Sep 27, 2024, 11:20:31 AM

நாகப்பட்டினம் மாவட்டம்

கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள நூற்றாண்டு பழைமைவாய்ந்த அருள்மிகு பிரசன்ன வெங்காடஜலபதி கோவில் உள்ளது.

பாழடைந்து கிடைக்கும் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இந்து சமய அறநிலையத்துறையினர் கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு

இத்த நிலையில் மேலமடவளாகப்பகுதியில் தனிநபர் ஒருவர் கோவிலுக்கு செல்லக்கூடிய பொதுப்பாதையை மறைத்து வீட்டின் அருகே கார் செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். 

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வருவாய்துறை சார்பில் பல முறை அறிவிப்பு செய்தும் ஆக்கிரமைப்பை அகற்றாமல் இருந்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை 

இதனை தொடர்ந்து வருவாய்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தோடு இன்று வந்த போது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாததால் பலத்த போலீஸ் பாதுகாப்போடு இடத்தை அளவீடு செய்து கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராணி முன்னிலையில் கார் செட்டில் இருந்த காரோடு சேர்த்து பூட்டி சீல் வைத்து சுற்றிலும் கம்பி வேலியை வைத்தனர். 

Latest Nagapattinam District News In Tamil 

ஏற்கனவே கடந்த மாதத்தில் இதே பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 1.50 கோடி மதிப்பிலான கோவில் இடத்தினை இந்து சமய அறநிலையத்துறையின் மீட்டது குறிப்பிடத்தக்கது. 

இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

 

VIDEOS

Recommended