சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர்களுக்கும் பெருமாள் கோயில் ஐயர்களுக்கும் இடையே பனிப்போர்

சண்முகம்

UPDATED: Nov 4, 2024, 11:56:47 AM

கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற பூலோக கைலாசமாக விளங்கும் நடராஜர் ஆலயம் உள்ளது இந்த நடராஜர் ஆலயத்தின் பெருமாள் கோயில் உள்ளது

இந்த கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரே இடத்தில் நின்று ஹரியும் சிவனையும் தரிசனம் செய்யலாம் 

இந்த நிலையில் பெருமாள் கோவில் ஐயர்களுக்கும் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இடையே பனிப்போர் நடந்து வருகிறது இதற்கு காரணம் சிதம்பர நடராஜர் கோயில் தீட்சிதர்கள் வசம் உள்ளது

பெருமாள் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது பெருமாள் கோயில் ஆலயத்தின் நேர் எதிரில் உள்ள கொடிமரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது

சிதம்பரம் நடராஜர் கோயில்

பல ஆண்டுகளாகவே இந்த பெருமாளின் கோவிலில் பிரம்ம உற்சவம் நடைபெறவில்லை 

இந்த நிலையில் பிரம்மவ உற்சவம் நடப்பதற்கு நடராஜர் கோயில் தீட்சதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் பெருமாள் கோயில் ஐயர்கள் வழக்கு பதிவு செய்தனர் இதை எதிர்த்து சிதம்பர நடராஜர் ஆலய தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கு தற்பொழுது சென்னை ஹை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கொடி மரத்திற்கு மிகவும் பழுதடைந்ததால் இதை மாற்ற வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு தபால் அனுப்பினர் பெருமாள் கோயில் ஐயர்கள்

இந்த நிலையில் கொடி மரத்திற்கு  பாலாலையம் இரவு 8 மணி அளவில் நடைபெற்றது

பெருமாள் கோயில் யாகசாலை நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கொடிமரம் மாற்றுவதற்கு கொடிமரம் அருகே பாலாய சிறப்பு பூஜை நடைபெற்றது

பூஜையில் ஈடுபட்ட பெருமாள் கோயில் ஐயர்கள் மற்றும் அறங்காவலர்கள் திருவேங்கடம் சுதர்சனம் வழக்கறிஞர் சம்பத் ஆகியோரிடம் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொது தீட்சதர்கள் பூஜை செய்யக்கூடாது என்று தகராறு செய்தனர்

கொடிமரம்

அப்பொழுது தீட்சதர்கள் செய்த தகராறு பொருள் படுத்தாமல் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் கொடிமரம் மாற்றுவதற்கான பாலாய பூஜையை செய்து முடித்தனர்

தற்பொழுது இருக்கக்கூடிய கொடிமரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது தற்போது  பழுதுபட்ட காரணத்தினால் இதை மாற்றியமைக்கு பணி 4.11.24 அன்று காலை 7 மணி அளவில் மாற்றும் பணி தொடங்குகிறது

இந்தக் கோயில் பெருமாள் கோவிலில்108 திவ்ய தேசங்களில் நாற்பதாவது திவ்ய தேசமாக விளங்குகிறது

இந்த பெருமாள் கோயில் பல்லவ மன்னாரால் கட்டப்பட்டது பின்பு இடிக்கப்பட்டது மீண்டும் அதே இடத்தில் 1534 ஆம் ஆண்டு கிருஷ்ண நாயக்க மன்னரால் நிறுவப்பட்டது இந்த கோவிலில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மோற்சவம் நடைபெற்றது

பிரம்ம உற்சவம் நடத்துவதற்கு அறங்காவலர்களும் இந்து சமய அறநிலையத்துறையும் முன்வந்தும் கூட பொது தீட்சர்கள் தடைவிதித்து வருகின்றனர்

இதனால் சிதம்பரத்தை சேர்ந்த தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் எம் என் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் அது தற்பொழுது நிலுவையில் உள்ளது

இந்த நிலையில் 4.11.2024 நடைபெற்ற கொடி மரத்து பூஜையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளித்தனர்

பின்பு இரவு 11 மணி வரையும் சிதம்பரம் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் லா மேக் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது

இதில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செகரட்டரி கலந்து கொள்ளவில்லை  எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சர்கள் மட்டும்தான் கலந்து கொண்டார்கள்

இதை போல் பெருமாள் கோயில் சார்பாக அறங்காவலர்கள் அறநிலைத்துறையில் சார்பில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பெருமாள் கோயில் ஐயர்கள் கலந்து கொண்டார்கள்

எந்த எந்த முடிவும் எட்டாததால் கலைந்து சென்றனர்.

 

VIDEOS

Recommended