• முகப்பு
  • சென்னை
  • வண்ணாரப்பேட்டையில் வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள் கதி கலங்கும் வியாபாரிகள்.

வண்ணாரப்பேட்டையில் வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள் கதி கலங்கும் வியாபாரிகள்.

நெல்சன் கென்னடி

UPDATED: May 19, 2024, 7:19:05 AM

சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் குமாரசாமி தெருவில் கிரண் ரெடிமேடு என்ற பெயரில் மேவாராம் வயது 30 என்ற மார்வாடி ஏழு வருட காலமாக துணி கடை நடத்தி வருகிறார்

இந்நிலையில் நேற்று மாலை பட்டாக்குத்தியுடன் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து ஓசியில் பேண்ட் சட்டை கேட்டு மிரட்டி உள்ளான் மேலும் பேண்ட் சட்டையை எடுத்துக் கொண்டு ஓடி உள்ளான் 

இந்நிலையில் வேறு கடைகளுக்கும் சென்று உள்ளான் இதனை அடுத்து வியாபாரிகள் ஒன்றிணைந்து கத்தியை காட்டிய வியாபாரிகளை மிரட்டிய மர்ம நபரை ஓடிச் சென்று பிடித்து ராயபுரம் என்.1 காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை அருகே கஞ்சா போதையில் செருப்பு கடை உரிமையாளர் ஊழியர் ஃபாஸ்ட் ஃபுட் உரிமையாளர் ஆகியோர் கஞ்சா போதை ரவுடிகளால் வெட்டப்பட்டு செருப்பு கடை ஊழியர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் தொடர்ந்து வியாபாரிகளை கஞ்சா போதையில் கத்தியை காட்டி பொருட்களை மிரட்டி வாங்கி வரும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிங்காரத்தோட்டம் ரெடிமேட் சங்கத் தலைவர் மம்மி டாடி பாஸ்கர் கேட்டுக்கொண்டார்

மேலும் இந்த பகுதியில் நான்கு காவல் நிலையத்திற்கு சரகம் வருவதால் அனைவரும் ரோந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொது மக்களை காக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டார்

இல்லையென்றால் அனைத்து வியாபாரிகளையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்

மேலும் கத்தியை காட்டிய மிரட்டிய மர்ம நபர் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் ரெடிமேட் கடை உரிமையாளர் மேவா ராம் மற்றும் வியாபாரி சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்

இதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி இடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

VIDEOS

Recommended