திருச்சியில் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம் 141 உயிர்களை காப்பாற்றிய விமானி

JK

UPDATED: Oct 12, 2024, 9:31:39 AM

திருச்சி மாவட்டம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சார்ஜா மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5:40 மணிக்கு 144 பயணிகளுடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் ஹைட்ராலிக் பிரச்சனையால் மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து கொண்டிருக்கிறது.

விமானத்தை பாதுகாப்புடன் இறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், விமான தொழில்நுட்ப குழுவினர் ஆகியோர்  மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது விமான நிலையத்தில் பயணிகள் வந்தவுடன் அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான 20க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

திருச்சியில் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம் 141 உயிர்களை  விமானி டேனியல் பெலிசோ காப்பாற்றி உள்ளார்.

தற்போது விமானம் பத்திரமாக தர இறங்கியது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருக்கும் பயணிகளை வெளியில் அழைத்து வரும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended