பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு.

JK

UPDATED: Jul 18, 2024, 10:52:55 AM

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ளது நல்ல காவல் தாய் அம்மன் கோயில். இந்த கோவிலுக்கு சொந்தமாக திருச்சி சாலையில் சுமார் 12 ஏக்கர் 98 சென்ட் நிலங்கள் உள்ளன.  இவற்றின் தற்போதைய மதிப்பு பல கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

தற்போதைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அந்த இடங்களை வணிக வளாகங்களாகவும் குடியிருப்பு வீடாகவும், மற்றும் வீட்டு மனை பட்டாவாக மாற்றி லட்சக்கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

Latest Trichy District News

துறையூர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு துறையூர் புறநகரில் நகராட்சி சார்பில் இடம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் இந்த கோவில் நிலத்தை அறநிலைத்துறையிடம் ஒப்புதல் பெற்று பேருந்து நிலையம் அமைத்தால் பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். 

மேலும், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றி அதை மீட்டால் சகல வசதிகளுடன் இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கலாம்.

கோயில் நிலம் மோசடி

எனவே ஆக்கிரமித்துள்ள பல கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பலமுறை திருச்சி மாவட்ட மற்றும் துறையூர் நகராட்சி நிர்வாகத்திடமும், இந்து அறநிலைத்துறையிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

News

மேலும் ஆக்கிரப்பு செய்தவர்கள் நாங்கள் ஆளும் கட்சி என்று அவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவதாகவும் பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்தனர். 

 

VIDEOS

Recommended