• முகப்பு
  • தமிழ்நாடு
  • தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு கருதவில்லையா ? மக்களவையில் துரை வைக்கோ கேள்வி ?

தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு கருதவில்லையா ? மக்களவையில் துரை வைக்கோ கேள்வி ?

கார்மேகம்

UPDATED: Aug 9, 2024, 6:22:10 PM

நாடாளுமன்றம்

மக்களவையில் நேற்று தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ பேசியதாவது (500 மீனவர்கள் கொலை)  தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 250 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

2024- ம் ஆண்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்

கடந்த 20- ஆண்டுகளில் 6- ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன் 

ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ

இதுவரை 500- க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை

பலர் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் அந்த மீனவர்களின் குடும்பங்களை எனது உறவினர்களாகவே கருதி அவர்களின் துயரங்களில் நான் பங்கேற்றுள்ளேன் 

( குடிமக்களாக கருதுகிறதா)

தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 40- ஆண்டுகளாக மத்திய அரசிடம் இந்த மீனவர் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்கள் ஆனால்

இந்த பிரச்சினை முன்பை விட மோசமான  நிலையை அடைந்துள்ளது.

Breaking Tamil nadu News 

1974- மற்றும் 1976- ம் ஆண்டுகளில்‌ இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல் அவை நமது தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பறித்து  விட்டன

இப்பிரச்சினையின் பின்புலத்தில் புவியில் அரசியல் உள்ளது மத்திய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான‌ அக்கறையுடன் செயல்படுகிறதா ? என தெரியவில்லை தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக கருதுகிறதா ? என்றும் தெரியவில்லை

தமிழ் நாட்டை இந்திய கூட்டாட்சி அமைப்பின் ஓர் அங்கமாக மத்திய அரசு கருதுகிறதா ?என்பதும் சந்தேகமாக இருக்கிறது எனவே தமிழக மீனவர்களின் இந்த முக்கியமான பிரச்சினைக்கு நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரையும் வெளியுறவுத் துறை மந்திரியையும் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

 

VIDEOS

Recommended