நடிகைகளை அச்சுறுத்தும் ஆபாச வீடியோக்கள்

கார்மேகம்

UPDATED: Oct 25, 2024, 12:28:31 PM

சென்னை

திரையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் நடிகைகள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் கணக்கில் அடங்காது

டிஜிட்டல் யுகத்தில் தினமும் புதிது புதிதாக  அச்சுறுத்தல்கள் வருவதும் அது அவர்களின் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதும் தொடர் கதையாகவே இருக்கிறது.

ஆபாச வீடியோக்கள்

இந்த அச்சுறுத்தல் பட்டியலில் பெரிய மிரட்டலாக இருப்பது நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் தான் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் கணிசமாக பரவிக் கிடக்கின்றன

இவை நிஜ வீடியோக்கள் என்றும் மார்பிங் செய்த போலி வீடியோக்கள் என்றும்  இருவேறு கருத்துக்களை பலரும் பகிர்ந்து வந்தாலும் அவற்றால் நடிகைகளுக்கு ஏற்படும் வலியும் வேதனைகளும் அதிகம் 

சில நடிகைகள் இதற்கு எதிராக குரல் கொடுத்து கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Latest Cinema News Today In Tamil 

இன்னும் சிலர் எதுவும் பேசாமல் மனதுக்குள் குமுறுகிறார்கள் அந்த வகையில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் கசிந்த நடிகர் - நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதை மறப்பதற்கில்லை 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் இந்த அந்தரங்க ஆபாச வீடியோ மற்றும்  புகைப்பட விவகாரங்களில் சிக்கி  தவிப்பதை பார்க்க முடிகிறது.

Breaking News Today In Tamil 

திருமணத்துக்கு முன்பு நடிகை நயன்தாரா ஒரு நடிகரை முத்தமிட்ட ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியது நடிகை திரிஷா பெயரில் குளியலறையில் இருக்கும் அந்தரங்க வீடியோ சில காலத்துக்கு முன்பு வெளியாகி திரையுலகையும் ரசிகர்களையும் அதிர வைத்தது

ஆபாச வீடியோக்கள் சிக்கல்களில் இருந்து தப்பிக்க நடிகைகள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்  என்கிறார் மூத்த நடிகை 

ஆபாச வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒளிக்கின்றன.

 

VIDEOS

Recommended