- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு அச்சுறுத்தலா ?
பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு அச்சுறுத்தலா ?
S.முருகன்
UPDATED: Aug 7, 2024, 1:41:59 PM
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி
தொகுதிக்குட்பட்ட பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், கோட்டைகுப்பம், லைட் ஹவுஸ், பிரளயம் பாக்கம்,அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
Latest Thiruvallur News & Live Updates
முகாமில் இந்த திமுக ஆட்சியில் பழவேற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் பள்ளிக்கு சென்று வரும்போது மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த மூன்று வருடமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என கூறி புகார் மனு அளிக்கப்பட்டது.
பி.எம். கிசான் திட்டம்
மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் இணைந்து அதனால் மீன்வள துறை திட்டங்கள் கிடைக்காமல் நீண்ட நாட்களாக சலுகைகளை பெற முடியாமல் இருந்த மீனவர்கள் பி.எம்.கிசான் திட்டத்தை ரத்து செய்யப்பட்ட விவரங்களையும் மீண்டும் மீன்வளத்துறை சலுகைகள் கிடைப்பதற்கான மனுவினையும் அளித்தனர்.
Thiruvallur News Today Live
அதிகபட்ச மனுக்கள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது போல் மீண்டும் முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என்றும் அதேபோல் மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்ப தலைவிக்கும் வழங்க வேண்டும் என்று விண்ணப்ப மனுக்களை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் அளித்தனர்.