• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சதப் பள்ளங்கள் வாகன ஓட்டிகள்  கடும் அவதி 

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சதப் பள்ளங்கள் வாகன ஓட்டிகள்  கடும் அவதி 

L.குமார்

UPDATED: Nov 15, 2024, 10:02:24 AM

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையைத் தொடர்ந்து கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் தவறான வடிவமைப்பு காரணமாகவும், மழைநீர் வடிகால் வாய்கள் பராமரிப்பில்லாத காரணத்தாலும் பெய்து வரும் மழைநீரானது வெளியேற வழி இல்லாமல் சாலையில் ஆங்காங்கே தேங்கியபடி காணப்படுகிறது. 

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை

இவ்வாறு தேங்கிய மழை நீரால் ராட்சதபள்ளங்கள் உருவாக்கி வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மழைநீர் வடிகால்வாய்கள் தரமான கட்டுமான பொருட்களால் கட்டப்படாத காரணத்தால், வாகனங்களில் இயற்றி வரும் குறைந்த எடையை கூட தாங்க முடியாமல் உடைந்து சேதம் அடைகிறது.

ராட்சதப் பள்ளங்கள்

இவ்வாறு சேதம் அடையும் போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படுவதுடன், சில சமயம் உயிர் சேதங்களும் ஏற்படுகிறது. 

அதேபோல் சேதமடைந்த இடங்களில் கவன குறைவாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.

விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும், நேர விரையத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended