• முகப்பு
  • குற்றம்
  • கள்ளச்சாராயம் விற்கும் நபரிடம் இருந்து விஷ நெடியுடன் கூடிய 180 ml அளவுள்ள10 கெமிக்கல் பாட்டில் பறிமுதல்.

கள்ளச்சாராயம் விற்கும் நபரிடம் இருந்து விஷ நெடியுடன் கூடிய 180 ml அளவுள்ள10 கெமிக்கல் பாட்டில் பறிமுதல்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 25, 2024, 7:02:32 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரமேரூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சண்முக வடிவு தலைமையிலான காவலர்கள் கஞ்சா, குட்கா ,புகையிலை ,மதுபானம் போன்ற போன்ற போதை வஸ்துகள் ஏதாவது கடத்தப்படுகின்றதா என சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது , வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி, கிராம சுடுகாடு குளக்கரையில் உள்ள முட்புதரில் கண்காணித்து கொண்டிருந்த போது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாக்கு மூட்டையில் எதையோ வைத்திருந்தார்.

கள்ளச்சாராயம்

காவல்துறையினர் விசாரிக்க முற்பட்டபோது , மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடிய அந்த நபரை மதுவிலக்கு காவல் துறையினர் மடக்கி பிடித்து அந்த சாக்கு மூட்டையை ஆய்வு செய்தபோது, அதன் உள்ளே சுமார் 180 ML அளவு கொண்ட சீல் மற்றும் லேபில் ஒட்டப்படாத கண்ணாடி பாட்டில்கள் 10 இருந்தன.

அந்த பாட்டில்களின் மூடியை திறந்து முகர்ந்து பார்த்த போது அதில் ஒருவிதமான விஷ நெடியும், கண்களில் எரிச்சலும், வாய் குமட்டலும் ஏற்பட்டது என்றும் இதை உட்கொண்டால் மனித உயிருக்கும் உடலுறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கள்ள சாராயத்தில் கலக்கும் மெத்தனலாகவும் இது இருக்கக்கூடும் எனவும் மதுவிலக்கு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

போலி மதுபானங்கள்

மேற்கொண்டு அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, அவர் பெயர் கோபிநாத் , வயது 46, கருவேப்பம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் என்றும் இந்த விஷ நெடியுடன் உள்ள பாட்டிலை தாம்பரத்தில் முகம் தெரியாத நபரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறியுள்ளார். 

மேலும் இந்த கெமிக்கலை வாங்கி வந்து நான் அதிக போலி மதுபானங்கள் தயார் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

டாஸ்மாக்

அதுமட்டுமல்லாமல், உத்திரமேரூரிலிருந்து கடல் மங்கலம் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடையின் (எண் 4538) மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் விற்பனையாளர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு ஒரு குவாட்டர் பாட்டலுக்கு 20 ரூபாய் விதம் கூடுதலாக கொடுத்து, அவர்களின் உதவியுடன் குவாட்டர் அரசு மதுபான பாட்டில்கள் வாங்கி வந்து நான் உற்பத்தி செய்யும் போலி மதுபான பாட்டில்களுடன் சேர்த்து குடி பிரியர்களுக்கு விற்பனை செய்வேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் கோபிநாத், தனது வீட்டின் பக்கம் உள்ள தண்ணீர் டேங்க் அருகே உள்ள முட்புதரில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபான பாட்டில்கள் EXPRESS-96, MCLENE-22 என மொத்தம் 120 பாட்டில்கள் கைப்பற்ற பற்று கோபிநாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்க அனுப்பப்பட்டார்.

மதுவிலக்கு காவல் துறை

விஷ நெடியுடன் கூடிய 10 பாட்டில்களை கைப்பற்றிய மதுவிலக்கு காவல் துறையினர் அதை இரசாயன பகுப்பாய்வு லேப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோபிநாத் மீது ஏற்கனவே உத்திரமேரூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது என கூறப்படுகிறது.

கள்ள சந்தையில் மதுபான விற்பனை செய்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் தினகரன், விற்பனையாளர் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் தலைமறைவு என கூறப்படுகிறது.

அவர்கள் இருவரையும் விரைவாக பிடித்து விடுவோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சா - குட்கா - போதை வஸ்துகள் அபின் - ஒயிட் சுகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  கஞ்சா, குட்கா, போதை வஸ்துகள் அபின், "ஒயிட் சுகர்" அனைத்தும் விற்பனை ஆகுகின்ற நிலையில் தற்போது கிடைத்துள்ளது மெத்தனாலா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended