பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது.

பரணி

UPDATED: Jun 19, 2024, 6:06:18 AM

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (23). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர் 17 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணபதி அந்த மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி நீங்கள் திருமணமானவர். உங்களுக்கு மனைவி உள்ளார் என்று கூறியுள்ளார்.

அதற்கு கணபதி, எனது மனைவியை பிடிக்கவில்லை, உன்னை தான் நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனிடையே மாணவிக்கு 3 மாதங்களாக வயிற்று வலி, தலைவலி இருந்துள்ளது. இதனால் மாணவியை அவரது தாயார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நெமிலி போலீசில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்து கணபதியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

 

VIDEOS

Recommended