• முகப்பு
  • அரசியல்
  • அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் நடிகர் விஷால் எச்சரிக்கை

அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் நடிகர் விஷால் எச்சரிக்கை

JK

UPDATED: Apr 23, 2024, 6:47:24 AM

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் திருச்சி மாவட்டம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

விழாவில் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருகிற 26 ஆம் தேதி நடிகர் விஷால் நடித்த ரத்தினம் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவர உள்ளது.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு நடிகர் விஷால் அளித்த பேட்டியில்

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. 

விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு

விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. 

நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு

ஓட்டுக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு எம்எல்ஏ விற்கு இரண்டு லட்சம் 

ரூபாய் தான் சம்பளம். பிறகு எப்படி இவர்களால் ஓட்டுக்கு எவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது என கேள்வி எழுப்பினார்.

 

  • 3

VIDEOS

Recommended