• முகப்பு
  • குற்றம்
  • பொதுமக்கள் கொடுத்து மனுவை வாங்கி துணை பி டி ஓ முன்னிலையில் கிழித்துப் போட்ட திமுகவை சேர்ந்த பெண் தலைவரின் கணவரால் மக்கள் கொந்தளிப்பு.

பொதுமக்கள் கொடுத்து மனுவை வாங்கி துணை பி டி ஓ முன்னிலையில் கிழித்துப் போட்ட திமுகவை சேர்ந்த பெண் தலைவரின் கணவரால் மக்கள் கொந்தளிப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 23, 2024, 8:15:16 AM

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று வார சந்தை நடைபெறுவது வழக்கம். 

இந்த சந்தையில் களக்காட்டூர் விச்சந்தாங்கள், காலூர், குருவிமலை, கீழ் பெரமநல்லூர், ஆர்பாக்கம், மாநகரில், வளத்தோட்டம், பெரியாநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து சந்தையில் வைத்து விற்பனை செய்வார்கள்.

மழை பெய்தால் சேறும் சகதியும் சேர்ந்து அதிக துர்நாற்றம் வீசும் இந்த வார சந்தை இடத்தில், அடிப்படை வசதிகள் சற்றுக் கூட இல்லை எனவும், இங்கு மேடும் பள்ளங்களும் நிறைந்து , பாதை வசதிகள் அறவே இல்லாததால் சுகாதாரம் சற்று கூட கடைப்பிடிக்க இயலவில்லை, மின்விளக்கு வசதியும் அறவே இல்லை என திமுக கட்சியைச் சேர்ந்த விச்சந்தாங்கள் கிளைச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் அவர்களே புலம்புகின்றார்கள்.

இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மிகவும் ஃபிரஷ்ஷான காய்கறிகளை கொண்டு வந்து சந்தையில் கடும் சிரமப்பட்டு விற்பனை செய்வதை கண்ட அப்பகுதி மக்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி அவர்களிடம் , அடிப்படை வசதிகளை செய்து தந்த பிறகு பொது ஏலம் விடுமாறு மனு அளித்தனர்.

களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி அவர்களிடம் கொடுத்த இந்த மனுவை, திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் நளினி அவர்களின் கணவர் டில்லிபாபு அவர்கள் மனுவை வாங்கி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையிலேயே பொதுமக்கள் அளித்த மனுவை கிழித்துப் போட்டதால் அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேலும் விச்சந்தாங்கள் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் ஏலத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று, துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பணம் கட்ட முயற்சித்த போது , அதை வாங்கக்கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ஊராட்சி மன்ற தலைவர் நளினியின் கணவர் டில்லி பாபு வால் மேலும் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க பணம் கட்டிய பாலாஜி என்பவரைவும் டில்லிபாபு மிகவும் கேவலமாக பேசி அவமானப்படுத்தியதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் விச்சந்தாங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் , மாகறல் காவல் நிலையத்திற்கு சென்று, ஊராட்சி மன்ற தலைவர் நளினி , டில்லிபாபு, ஊராட்சி செயலர் சேகர், துணை வட்டார் வளர்ச்சி அலுவலர் பவானி, மற்றும் திமுக கட்சியை சேர்ந்த ஆட்டோ பாலாஜி ஆகிய ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த ஏலத்தை ரத்து செய்யக் கோரியும் மனு அளித்துள்ளார்கள்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யா அவர்களுக்கும் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க விச்சந்தாங்கள் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேட்டி கிருஷ்ணகுமார் வழக்கறிஞர். விச்சந்தாங்கள் திமுக கிளை செயலாளர்.

 

VIDEOS

Recommended