• முகப்பு
  • உலகம்
  • அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன் கமலா ஹாரிஸ் உறுதி

அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன் கமலா ஹாரிஸ் உறுதி

கார்மேகம்

UPDATED: Aug 25, 2024, 8:22:56 AM

வாஷிங்டன்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என்றும் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வேன் என்றும் கமலா ஹாரிஸ்  கூறினார்.

( களம் இறங்கிய கமலா ஹாரிஸ்)

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5- ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னால் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சா வளியை சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார்

கமலா ஹாரிஸ்

அவரை ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 19- ந் தேதி தொடங்கியது

இந்த மாநாட்டில் ஜனாதிபதி ஜோபைடன் முன்னால் ஜனாதிபதிகள் ஒபாமா பில் கிளிண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கமலா ஹாரிசுக்கு தங்களுடைய ஆதரவை  தெரிவித்தனர்.

( தாய் ஷியாமளாவை நினைவு கூர்ந்தார்)

உலக செய்திகள்

இந்த நிலையில் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டார் கட்சியின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டு மாநாட்டில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது 

என் வாழ்வில் நான் எதிர்பாராதது நடப்பது ஒன்றும் புதிதல்ல என் அம்மா ஷியாமளாவை தினமும் மிஸ் செய்கிறேன் குறிப்பாக இப்போது எனக்கு தெரியும் என் அம்மா வானிலிருந்து இதைப் பார்த்து புன்னகைப்பார், ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும் எங்கள் கட்சி மற்றும் என் அம்மாவின் சார்பாகவும் தங்கள் கனவுகளைத் துரத்த கடினமாக உழைக்கும் மக்கள் சார்பாகவும் அனைவரின் சார்பாகவும் அமெரிக்காவுக்கான உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன் 

( விளைவுகள் தீவிரமாக இருக்கும்)

டிரம்ப்

நவம்பர் 5- ந் தேதி நடைபெறவுள்ள தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமானது இந்த தேர்தலின் மூலம் நமது நாடு கடந்த கால கசப்பு மற்றும் பிளவுபடுத்தும் சண்டைகளை கடந்து செல்ல விலைமதிப்பற்ற மற்றும் விரைவான வாய்ப்பைப் பெற்றுள்ளது முன்னோக்கி செல்வதற்கான ஒரு புதிய வழியை திட்டமிட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது

எனவே அரசியல் பிளவுகளை நிராகரித்து அமெரிக்கர்களாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் டிரம்ப் (தான் )ஒரு தீவிரமான மனிதர் என்பதை பல வழிகளில்  நிரூபித்துள்ளார் எனவே அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் 

( அனைவருக்குமான ஜனாதிபதி)

பாலியல் வழக்கு

கடந்த தேர்தலில் அவர் தோல்வியுற்ற போது அவர் ஒரு ஆயுதமேந்திய கும்பலை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பி வன்முறையில் ஈடுபட்டார்

நிதி முறைகேடுகள் மற்றும் பாலியல் வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் அமெரிக்காவின் 47- வது ஜனாதிபதியாக என்னை தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கான திட்டங்களை செயல்படுத்துவேன் அனைத்து அமெரிக்கர்களுக்கு மான ஜனாதிபதியாக  நான் இருப்பேன்

நம் தேசம் வலுவடைவதை உறுதி செய்வதோடு அதன் உலகளாவிய தலைமையை கட்டிக் காப்பேன் 21- ம் நூற்றாண்டிற்கான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறுவதை உறுதி செய்வேன் உக்ரைன் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கான ஆதரவை தொடர்வேன்  இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.

 

VIDEOS

Recommended