குன்னூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) சார்பில் கொடி அணி வகுப்பு ஊர்வலம்.

அச்சுதன்

UPDATED: Oct 6, 2024, 3:17:19 PM

நீலகிரி மாவட்டம்

குன்னுாரில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) சார்பில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைப்பெற்றது சீம்ஸ் பூங்காவில் தொடங்கிய ஊர்வலத்தை சிறப்பு அழைப்பாளரான லஞ்ச் ஹோம் ரவி கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்

இந்த கொடி அணி வகுப்பு ஊர்வலம் பேண்டு வாத்தியத்துடன் புறப்பட்டு  பெட்போர்டு ,YMCA கார்னர், வழியாக லாலி மருத்துவமனை ,மவுண்ட் ரோடு வழியாக வி,பி, தெருவை வந்தடைந்தது.

இந்த கொடி அணி வகுப்பு ஊர்வலத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தனர் இதில் சிறுவர்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் ஏ டி எஸ் பி சௌந்தர்ராஜன் மற்றும் டிஎஸ்பி குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

RSS

காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்களை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்

மேலும் இந்த ஊர்வலத்தை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளை கண்டு களித்தனர் இந்நிகழ்ச்சியில் RSS நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended