ஆதார் அட்டை புதுப்பிக்க 14 ஆம் தேதி கடைசி நாள் என்று தவறான வதந்தி

ரமேஷ்

UPDATED: Sep 11, 2024, 8:30:41 PM

ஆதார் அட்டை

கும்பகோணத்தில் ஆதார் அட்டை தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது.

பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

UIDAI

ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது. 

இந்நிலையில் உங்கள் ஆதார் அட்டை பழையது என்றால்.. அதாவது முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம் 14ம் தேதிதான் அதற்கான கடைசி வாய்ப்பு என்று கூறப்பட்டது.

Aadhar Card 

முகம் கண் கைரேகை மாறுவதால் பத்தாண்டுக்கு ஒரு முறை ஆதாரில் புதுப்பிக்க வேண்டும். தற்போது பத்தாண்டுக்கு முன் ஆதார் அட்டை எடுத்தவர்கள் புதிய ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வரவேண்டாம். எப்போது வேண்டுமானாலும் ஆதர அட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தலைமை தபால் நிலையம் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Breaking News Today Live 

தொடர்ந்து தெரிவித்த போது வருகிற 14 ஆம் தேதி கடைசி நாள் என்று தவறான வதந்திகளால் தினமும் அதி காலையில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை புதுப்பிப்பதற்காக வந்து விடுகின்றனர். 

பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதராட்டியை புதுப்பித்துக் கொள்ளலாம் கடைசி நாள் என்பதே கிடையாது என்று தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended