பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கும் சிசிடிவி காட்சி
ஆர். தீனதயாளன்
UPDATED: Nov 4, 2024, 6:45:43 PM
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது. அப்போது பாபநாசம் பகுதியை கடந்து சென்றபோது அஜித் என்பவர் கை நீட்டி நிறுத்த சொல்லியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பேருந்தை 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் வந்து அய்யம்பேட்டை அருகே பேருந்தை மறித்து, டிரைவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
இதையடுத்து, பேருந்து நடத்துனர் சதீஷ் கீழே இறங்கி அவரிடம் பேச முயன்ற போது நடத்துனரை அஜித் சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து, பேருந்தில் ஏறி ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார்.
அஜித் தாக்கியதில் படுகாயம் அடைந்த நடத்துனர் சதீஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு