• முகப்பு
  • குற்றம்
  • "ஆபரேஷன் அகழி" தலைமறைவு குற்றவாளி வீடு, அலுவலகத்தில் 70பவுன் நகை 27பத்திரங்கள் மற்றும் 18லட்சம் பணம் பறிமுதல்

"ஆபரேஷன் அகழி" தலைமறைவு குற்றவாளி வீடு, அலுவலகத்தில் 70பவுன் நகை 27பத்திரங்கள் மற்றும் 18லட்சம் பணம் பறிமுதல்

JK

UPDATED: Sep 28, 2024, 8:36:14 AM

திருச்சி

ஆப்ரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பட்டனர் குற்றவாளிகள் கைது செய்தும் அவரிடமிருந்து நகைகள், சொத்து பத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள், குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனங்கள், வீச்சருவாக்கள், உள்ளிட்டவை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று இரவு தலைமறைவாக இருந்துவரும் சாத்தனூர் அண்ணாமலை தொடர்புடைய அலுவலகம், அண்ணாமலையின் பினாமி சாத்தனூர் ராஜ்குமார், அண்ணாமலையுடன் திருமணம் கடந்த உறவில் இருந்துவரும் கே.கே. நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்துவரும் மீனாட்சி ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் தனிப்படையினர் அதிரடியாக இரவு சோதனை மேற்கொண்டனர்.

Latest Crime News In Tamil

அப்போது சாத்தனூர் ராஜ்குமார் வீட்டில் அவருக்கு சம்மந்தம் இல்லாத 17பத்திரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் மீனாட்சி என்பவரின் வீட்டில் சம்மந்தம் இல்லாத 10பத்திர ஆவணங்களும், 70சவரன் நகை, மற்றும் ரூ.18,92,750/-கணக்கில் வராத பணம் இருந்ததால், திருச்சி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வருமான வரித்துறையின் Senior Tax Assistant முத்தலீவ் தலைமையிலான வருமானவரிதுறையினர், மேற்படி பணம், நகை மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

ஆபரேஷன் அகழி 

மேலும் ஆபரேஷன் அகழி தூவங்கும் போது ஒரு பெயர் பட்டியல் தான் இருந்தது. ஆனால் பத்திரிக்கையில் வந்து செய்தியின் காரணமாக ஏற்பட்ட விழிப்புணர்வால் நிறைய மனுதாரர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியுள்ளனர். 

குறிப்பாக புதன்கிழமை குறை தீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்களின் தகவலின் அடிப்படையில் 2, 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்றுவருகிறது.

மேலும் ஆப்ரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்துவரும் எதிரிகளை தனிப்படை அமைத்து விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Breaking News In Tamil 

திருச்சி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண்.9787464651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended