78 ஆவது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Bala
UPDATED: Aug 15, 2024, 5:37:16 AM
இந்திய சுதந்திர தினம்:
இந்தியாவின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாளில், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும்.
இந்த நாள் தேசிய பண்டிகையாக நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரமான டெல்லியில், இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அங்கு கூடியுள்ள மக்களிடையே உரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து, இராணுவ அணிவகுப்பு, பாரம்பரிய நடனங்கள், பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
INDEPENDENCE DAY
மாணவா்கள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மிக முக்கியமானதாகும். பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, மாணவா்கள் தேசிய கீதம் பாடல்களை பாடுகிறார்கள். இதையடுத்து மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள், பேச்சு போட்டிகள், பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இது நாடு முழுவதும் ஒருமித்த உணர்வை உருவாக்கும் நாளாகும். இந்நாளில், நம் சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு நமது மரியாதையை செலுத்துகிறோம்.
இந்திய சுதந்திர தினம், நாடு முழுவதும் தேசியம், சமூகநீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாளாகும்.
The Great India
பல அரசியல்வாதிகளாலும் பல அரசு அதிகாரிகளாலும் நம் நாடு இன்னும் வளர்ச்சி அடையாமலே போய்க்கொண்டு இருக்கின்றது.
நாடு முன்னேற வேண்டுமெனில் இனியாவது மக்கள் தகுதியான நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் குற்ற வழக்குகளில் சம்பந்தம் உள்ள வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
பொதுமக்களும் நம்மால் முயன்ற செயல்களை உண்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் . இது ஒன்றாவது நாம் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் பொதுவெளியில் குப்பை போட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டால் நம் நாடு சுத்தமாக மாறும்.
எதுவாயினும் நாம் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம் ஒற்றுமையாக இருப்போம் தேசத்தை முன்னேற்றுவோம்.