• முகப்பு
  • லஞ்சம்
  • சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை 

சண்முகம்

UPDATED: Apr 25, 2024, 3:51:01 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ஆண்டு கணக்கு தணிக்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதனை கடலூர் மாவட்ட உள்ளூர் தணிக்கை குழு அசிஸ்டன்ட் டைரக்டர் பூங்குழலி, உள்ளூர் தணிக்கை குழு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கணக்கு தணிக்கை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற வரவு செலவுகள், பல்வேறு பணிகளுக்கான நிதி செலவிடுதல் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பேரூராட்சியின் செயல் அலுவலராக இருக்கும் சீனிவாசன் என்பவர் இந்த ஆய்வின் போது பேரூராட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ஆய்வு செய்யும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 1.20 லட்சம் பணம் வைத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது தலைமையில் மாவட்ட ஆய்வு குழு துணை அலுவலர் சுபத்ரா , இரண்டு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்ததில் கணக்கில் வராத கணக்குத் தணிக்கை செய்ய வந்திருந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வைத்திருந்த 1.20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்‌.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தின் மூலம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.20 லட்சம் பணத்துடன் வெளியேறியுள்ளனர்.

மேலும் செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவலகத்தில் பணி செய்யும் சிலர் இந்த விசாரணை வலையத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளை இது குறித்து விரிவான அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.