• முகப்பு
  • இந்தியா
  • ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை நேரத்தை அரசிடம் பரிந்துரைத்த ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.

ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை நேரத்தை அரசிடம் பரிந்துரைத்த ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.

Bala

UPDATED: Jul 21, 2024, 2:56:37 PM

கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்க மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த பரிந்துரை, ஐடி ஊழியர்களிடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. "இது மனிதாபிமானமற்ற செயல்" என குறிப்பிட்டுள்ள அவர்கள், கூடுதல் பணிநேரங்களால் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பணிநீக்கம் பற்றிய கவலைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

India News Headlines

கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961-ஐ திருத்துவது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்த சட்ட திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) மாற்ற வேண்டும் என ஐடி நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளன. 

தற்போது, தொழிலாளர் சட்டங்கள் 12 மணி நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் நேரம்) என்ற அளவிலான வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. 

Latest Breaking News In India

ஆனால், ஐடி துறையின் புதிய முன்மொழிவில், "IT/ITeS/BPO துறையில் பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது அனுமதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

VIDEOS

Recommended