- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்தோணி ராஜ்
UPDATED: Sep 12, 2024, 8:57:39 AM
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை
அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.
முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி,கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1800-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அகழாய்வு பணி
இந்நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுக்கப்ட்டுள்ளது.
இதனை முன்னோர்கள் உணவு அருந்தவோ அல்லது மண் பாண்டங்களின் மூடியாக பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு