• முகப்பு
  • சினிமா
  • நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடிகர் சங்க பொதுக்குழு 8ம் தேதி கூடுகிறது

நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடிகர் சங்க பொதுக்குழு 8ம் தேதி கூடுகிறது

கார்மேகம்

UPDATED: Sep 4, 2024, 7:27:04 AM

சென்னை

ஹேமா கமிட்டி மலையாள சினிமாவில்  புயலை கிளப்பி உள்ள நிலையில் தமிழ் நடிகைகளும் பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்

தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்

இது குறித்து நடிகர் சங்க நடிகர் சங்கபொதுச் செயலாளர் விஷால் கூறும் போது ஹேமா கமிட்டி மாதிரி தமிழ் நாட்டிலும் கமிட்டி உருவாக்குவோம்

ஹேமா கமிட்டி

நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் குழு அமைக்கப்படும் கமிட்டி உருவாக்குவது கண்டிப்பாக நடக்கும் அதை செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றார்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 8- ந்தேதி காலை 10- மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கூடுகிறது

Latest Cinema News

கூட்டத்தில் பங்கேற்க 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது இந்த பொதுக் குழுவில் நடிகைகளுக்கு எதிரான  பாலியல் குற்றங்கள் நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய கமிட்டி அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட நடிகர் நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்துவது குறித்தும் நவம்பர் 01- ம் தேதி முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட சினிமா பணிகளை நிறுத்தி பட அதிபர் சங்கம் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பது குறித்தும் பொதுக் குழுவில் ஆலோசிக்க உள்ளனர்

 

VIDEOS

Recommended