• முகப்பு
  • விவசாயம்
  • புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலை.

புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலை.

சாம் பென்னட்

UPDATED: Apr 23, 2024, 1:35:20 PM

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 2லட்சம் ஏக்கர் விவசாய பாசனத்திற்கு இரண்டு பிரிவுகளாக கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதையடுத்து ஒரு லட்சத்து 3ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு 5முறையாக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி நான்காவது முறை தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில் அணையில் போதுமான தண்ணீர் இல்லை எனக் கூறி 5வது முறை திறக்க வேண்டிய தண்ணீரை பொதுப்பணித் துறையினர் திறக்கவில்லை. 

இதற்கிடையே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பாசன விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எள், கடலை, மக்காச்சோளம், சோளம், உளுந்து போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளனர்.

இந்நிலையில் பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பாசன விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை அறிவித்த பின்னர் தண்ணீர் திறந்து விட படாது என அரசு கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் கூறினர்.

 

VIDEOS

Recommended