மன்னார்குடியில் திமுக நகர்மன்ற உறுப்பினரின் கணவர் அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்.
தருண்சுரேஷ்
UPDATED: Nov 4, 2024, 11:15:19 AM
திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது . திமுக - அதிமுகவினர் இடையே கட்சியின் வளர்ச்சியில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது .
இந்த நிலையில் அதிமுக வார்டு செயலாளர் ரமேஷியின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாமல் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி ரமேஷிடம் தொடர்ந்து முன் விரோதமாக இருந்து வந்துள்ளனர்,
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷை மூன்று பேர் கொண்ட திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி தலைமையிலான (சேனா , ரவி, துரை ,) கும்பல் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரிவாளால் தாக்குதல் நடத்தி உள்ளனர் .
இதில் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.