• முகப்பு
  • குற்றம்
  • ஸ்ரீமுஷ்ணம் ராமாபுரத்தில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை காவல் துறைக்கு தகவல் சொன்னவரை மது விற்பவர்களிடம் போட்டுக் கொடுத்த போலீஸ்.

ஸ்ரீமுஷ்ணம் ராமாபுரத்தில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை காவல் துறைக்கு தகவல் சொன்னவரை மது விற்பவர்களிடம் போட்டுக் கொடுத்த போலீஸ்.

சண்முகம்

UPDATED: Apr 28, 2024, 7:27:36 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கடையில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், இக்கடையில் கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாகவும், மூடும் நேரத்திற்கு பிறகும் தொடர்ந்து கள்ளத்தனமாக மாமூல் கொடுத்து விட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அப்பகுதி மக்கள் கண்டு வேதனை அடைந்த நிலையில் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

 

மேலும் இந்த சரக்கு விற்பதை அருகில் உள்ள கண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கள்ளத்தனமாக மது விற்பதை தடுத்து இப்பகுதி விவசாயிகள், மக்களின் நலனை காக்க வேண்டும் என தகவல் கொடுத்த நிலையில்,

ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தகவல் கொடுத்த ஜேசுதாஸ் நம்பரை கள்ளத்தனமாக மது விற்பவர்களிடம் கொடுத்துவிட்டு மேலும் கள்ளத்தனமாக மது விற்பவர்களிடம் தங்களுக்கு வேண்டியதை (பணம்) பெற்றுச் சென்றதாக பாதிக்கப்பட்ட ஜேசுதாஸ் கூறி வருகிறார்.

இது குறித்து ஜேசுதாஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து கள்ளத்தனமாக மது விற்பதையும், தான் இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையிலும் போலீசார் கண்துடைப்புக்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கள்ளத்தனமாக மது விற்பவர்களிடம் என்னுடைய அடையாளத்தை கூறி போன் நம்பரையும் கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

இதனால் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் என்னை வெட்டுவதற்கு கத்தியோடு தேடிக் கொண்டுள்ளனர்.

நான் தலைமறைவாக இருக்கிறேன் என்று தன்னுடைய மனக்குமுறலையும் வேதனையையும் அச்சத்தையும் ஜேசுதாஸ் வெளிப்படுத்தி பேசியுள்ளார் இதுகுறித்த ஆடியோவும் வெளியாகி உள்ளது.

மேலும் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவதாகவும் தான் தற்போது உயிருக்கு பயந்து  தலைமறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த பலரும் தெரிவிக்கும் போது இந்த ஆட்சியில் காவல்துறையில் ரகசியம் காக்கப்படும் என்பது வெளி பேச்சுக்கு தான் எனவும், நடைமுறை வேறு மாதிரி இருப்பதாகவும், காவல்துறை திரை மறைவு நபர்களோடு எப்போதுமே கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended