• முகப்பு
  • உலகம்
  • டிரம்பை கொலை செய்வதற்காக 12 மணி நேரமாக கோல்ஃப் மைதானத்தில் காத்திருந்த தொழில் அதிபர்.

டிரம்பை கொலை செய்வதற்காக 12 மணி நேரமாக கோல்ஃப் மைதானத்தில் காத்திருந்த தொழில் அதிபர்.

கார்மேகம்

UPDATED: Sep 18, 2024, 6:47:15 PM

வாஷிங்டன் 

டிரம்பை கொலை செய்வதற்காக தொழில் அதிபர் 12 மணி நேரமாக கோல்ஃப் மைதானத்தில் காத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது 

( டிரம்பை கொல்ல முயற்சி)

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னால் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் வெஸ்ட்

பாம் கடற்கரை பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டு இருந்தார் 

Trump

அப்போது டிரம்ப் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47- துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாக குறிபார்த்துக் கொண்டு இருந்தார் 

இதை கண்ட டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார் எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீஸ் சார் அவரை கைது செய்தனர்

( போலீஸ் சார் தீவிர விசாரணை)

விசாரணையில் அவர் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த ரியான் வெஸ்லிரூத் ( வயது 58) என்பதும் அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது எனினும்  

எதற்காக அவர் டிரம்பை கொலை செய்ய முயற்சித்தார் என்பது தெரியாத நிலையில் அவரிடம் போலீஸ் சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதனிடையே ரியான் வெஸ்லிரூத் டிரம்பை கொலை செய்வதற்காக சுமார் 12- மணி நேரம் கோல்ஃப் மைதானத்தில் காத்திருந்தது தெரியவந்துள்ளது இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது 

(12 மணி நேரமாக காத்திருந்தார் ) 

ரியான் வெஸ்லிரூத் கோல்ஃப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும் போது ஒரு டிஜிட்டல் கேமரா கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார் அந்த பையில் சில உணவுகளும் இருந்தன

இதன் மூலம் அவர் வெகு நேரம் கோல்ஃப் மைதானத்தில் காத்திருந்தது தெரிந்தது அந்த வகையில் அவர் கோல்ஃப் மைதானத்தில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் கிட்டத்தட்ட 12- மணி நேரமாக காத்திருந்தது அவரது செல்போன் தரவுகள் மூலம் தெரியவந்தது

டிரம்பின் வருகைக்காக காத்திருந்த ரியான் வெஸ்லிரூத் அவர் தனது பார்வைக்கு நேராக வந்ததும் துப்பாக்கியால் சுடுவதற்கு தயாரானார் நல்வாய்ப்பாக பாதுகாப்பு படையினர் அவரது சதியை முறியடித்தனர் 

( சமூக வலைத்தளத்தில் கடும்

விமர்சனம்)

ரியான் வெஸ்லிரூத்தின் குடும்பத்தினர் நண்பர்கள் அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

அதே போல் ரியான் வெஸ்லிரூத்தின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளன

அதில் ரியான் வெஸ்லிரூத் கடந்த காலங்களில் சமூக வலைத்தளத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டது தெரியவந்துள்ளது

கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர். 

VIDEOS

Recommended