நீலகிரி மாவட்டத்தில் இன்று உலக புகழ்பெற்ற 126 வது மலர் கண்காட்சி

அச்சுதன்

UPDATED: May 9, 2024, 6:51:25 PM

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசன் காலமாகும்.

இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலை அனுபவிக்க உதகைக்கு சுற்றுலா வருவது வழக்கம்.

அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு 126வது மலர்க்கண்காட்சி நாளை துவங்கக 20ம் தேதி வரை 10 நாட்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது.

இதற்காக தயார் செய்யப்பட்ட 45 ஆயிரம் மலர்த்தொட்டிகள் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென்டல்கேஸ், ஓரியண்டல்லில்லி, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 75 இனங்களில் 388 வகையான ரகங்கள் சுற்றுலா பயணி பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மலர் கண்காட்சிக்காக மலர் அலங்காரத்தை ,மலர் மாடத்தில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மலர்கண்காட்சியின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக மே10 தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய இரு நாட்கள் தாவரவியல் பூங்காவில் LASER LIGHT SHOW காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலர்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

VIDEOS

Recommended