ஒரு வருடத்திற்கு மேலாக குடிநீர் பைப் லைனில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத வேதனை

சண்முகம்

UPDATED: Apr 30, 2024, 11:03:41 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் கிழக்குத் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காததால் பைப் லைன் அருகில் மூன்றடி ஆழமான பள்ளம் எடுத்து அதில் குடம், வாளி உள்ளிட்டவற்றை வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

 

குடிநீர்பைப்லைனில் சரிவர தண்ணீரும் வருவதில்லை. இதுகுறித்து அவர்கள் குறிப்பிடும்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுமையான அளவில் நீர் நிரப்பாமல் இருப்பதாலும்,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு போதுமான தண்ணீர் தரக்கூடிய போர்வெல் அமைக்காமல், தண்ணீர் ஏற்றுவதற்கு தேவையான மின்சாரம் இல்லாமல் இருப்பதே இவற்றுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

 

தற்போதைய சூழலுக்கு ஏற்ப கிராம மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனையோடு கண்ணீர் சிந்துகின்றனர்.

 

தினசரி குடிநீர் பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கிறது எனவும், இதனால் தினசரி வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் எங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரம் வயல்வெளிகளில் உள்ள போர்வெல்லை நம்பியே இருப்பதாகவும் கண்ணீரோடு கதறி வருகின்றனர்.

 

உடனடியாக அலட்சியம் காட்டாமல் மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் தண்ணீர் எப்போதும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அவதியிடும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் பொறுத்திருந்து வாழ்வதை தவிர்த்து வேறு வழியில்லை நமக்கு.

 

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended